About Me

My photo
Funloving,Social,Humorous,Spontaneous at times.Somebody who is empathetic,likes to express and keep learning.

Wednesday, November 4, 2020

ஆயுத எழுத்து- அப்பா நித்திலா குட்டி கதை




நித்திலா : அப்பா உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள்18, உயிர் மெய் எழுத்துக்கள் 216, அது என்ன ஆயுத எழுத்து 1 அப்படி போட்டு இருக்கு??

நான்: இல்ல டா மூணு circle triangle shape ல இருக்குமே அது தான்டா.

நித்திலா : ஓ.அதுவா? ஆனா அது தனியா இருக்கும் பாவம் ல.

நான்: ????என்ன டா சொல்றே?

நித்திலா: இல்ல அப்பா அ நாவுக்கு ஆ நா friend இல்ல sister வெச்சுகலாம். அது மாறி எல்லா உயிர் எழுத்துக்கும் friends இருக்கு. இது தனியா இருக்கும் பாவம்லே?

நான்: ஓ அப்படி சொல்றியா டா.

நான் மனதிற்குள் 'இந்த உலகத்திலேயே ஒரு எழுத்து க்கு friend இல்லனு கவலைப்பட்ட ஒரே ஜீவன் நீயா தான் இருக்கும்'
சிறிது யோசனைக்கு பின்
நான்: நிதிலா அப்படினா ஐ கூட தனியா தானே இருக்கும்.

நித்திலா புன்னகைக்க தொடங்குகிறாள்.

நித்திலா : அப்பா சூப்பர் அப்பா.அப்ப  ஃ க்கு ' ஐ' friend கிடச்சுடுச்சு. இனிமே ரெண்டும் friends a இருப்பாங்க.

நான்: ஆமாம் டா. உன் idea அருமை.

4 comments: