உள்ளே நுழைந்ததும் தன் 12 வயது மகன் ரமேஷ் அழுதபடியே நின்று கொண்டிருந்ததை கவனித்தான். " என்ன ரமேஷ் என்னப்பா ஆச்சு ஏன் அழுது கொண்டே இருக்க??" என்று வினவிய மகேஷ்க்கு எதுவும் பதில் சொல்லவில்லை.
"என்னப்பா அப்பா கேட்டுட்டே இருக்காரு நீ எதுவுமே பதில் சொல்லாம அமைதியா இருந்தா எப்படி?" என்று கூறியவாறு hall இற்குள் நுழைந்தாள் ரம்யா.
"அப்பா ! என்னுடைய ஸ்கூல் science exhibition காக நான் ஒரு miniature farm land create பண்ணி இருந்தேன்.கிட்டத்தட்ட 2 weeks effort அப்பா.இன்னிக்கு ஸ்கூலுக்கு submit பண்ண எடுத்துட்டு போகும்போது மழையில் நனைந்து complete ஆ வீணா போயிருச்சு. " என்று கூறிக்கொண்டே தன்னிடம் வந்த மகனை சமாதானப்படுத்தினான் மகேஷ்.
மதியம் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கண்ணீர் மல்க மழையில் நெல் மூட்டை எல்லாம் நனைஞ்சிகிட்டு இருக்கு எப்படியாவது கொஞ்சம் சீக்கிரமா பண்ணிடுங்கயா என்று கூறியதை உதாசீனப்படுத்தி வேகமாக கிளம்பியதை நினைத்து மனம் வருந்தினான் மகேஷ்.
Good one Vijay 👍
ReplyDeleteThanks machi
ReplyDelete