About Me

My photo
Funloving,Social,Humorous,Spontaneous at times.Somebody who is empathetic,likes to express and keep learning.

Saturday, June 6, 2020

A Short Film by நண்பர்கள்.




விஜய்   32 வயது இளைஞன்  . US  MNC   இல்  மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிபவன். அன்பான அப்பா, அம்மா, மனைவி, அழகான குழந்தை , தம்பி மற்றும் நண்பர்கள் இருந்தும் ஒரு ஏக்கத்துடன் வாழ்பவன். ஏக்கம் அல்ல கிட்டத்தட்ட இவன் வயதில் எல்லாருக்குமே இருக்கும் ஒரு குழப்பம். West  இல் எல்லாவற்றையும் ஆய்வு செய்து பெயர் வைத்திருப்பது போல இந்த குழப்பத்திற்கும் ஒரு பெயர் உண்டு.' Quarter    Life  Crisis'.

'என்னது  Quarter  லே  Fries  ஆ ? ' . இல்லைங்க இது ' Quarter  Life  Crisis'. என்னதான் நல்ல வேலை ,கை  நிறைய சம்பளம் இருந்தாலும் இது நம்ம வேலை கிடையாது நம்ம வேற ஏதாவது செய்யணும்னு நம்ம  டெஸ்டினி வேற  என்ற நினைப்பு தான் அது .

நம்ம விஜய் இருக்கானே  கார்ட்டூன் பார்த்தாலும் கமர்சியல் படம் பார்த்தாலும் எப்போதும் இதே நினைப்புதான்.

விஜய்க்கு நெருங்கிய நண்பர்கள் னு  சொன்னா  மூணு பேர்.PC  கண்ணன் அவனை செல்லம்மா PC  னு  கூப்புடுவாங்க . அவன் வந்து சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறான். இன்னொருத்தன் தினேஷ் அவன் இன்ஜினியரிங் டிசைன் கம்பெனியில் வேலை பார்க்கிறான். இன்னொருத்தன் ரஞ்சன் அவன் Marine என்ஜினீயர் ஆ வேலை பாக்குறான்.மூவருமே பெங்களூரில்  இருக்கிறார்கள்.

நண்பர்கள்கிட்ட இதே பேசிட்டு இருப்பான். போனில் " Dinesh மாமா!! actual ஆ இந்த Kung  Fu  Panda  ல என்ன சொல்ல வர்ரான்னா??". Dinesh "டேய் கார்ட்டூன் படத்தில் Philosphy  ஆ ??". 
" இல்ல மாமா நீ என்னதான் இப்ப நூடுல் சூப் தான் செஞ்சு வித்தா லும் உண்மையிலேயே நீ ட்ராகன் வாரியர் ஆகணும்னு மனசார நினைச்சேன்னா  நீ ஆயிடுவே"
தினேஷ்  மனசுக்குள் "இந்த கொசு தொல்லை தாங்க முடியலையே நாராயணா!!"

"PC  மச்சி இந்த Pursuit  of Happyness படத்தில் பார்த்தேனு  வச்சுக்க . Will 
Smith  சேல்ஸ்மேனாக இருப்பான். ஆனால் அவன்  ambition   Wall  Street  லே  ஒரு பெரிய Fund  Manager ஆவுறதுதான். அவன் hard work  பண்ணி கடைசியில அவன் நினைத்தது அடைந்து விடுவான் பாரு. PC " ஆமா மச்சிCorrect . Will  Smith நடிச்ச பேட் பாய்ஸ் தெரியும் இது  என்ன மச்சி  புது படமா ??.சரி விடுடா சூனாபானா".


"ரஞ்சா !! இந்த Robin Sharma  என்ன  சொல்ரான்னா ??" .
 Ranjan  " என்னது  Robin Singh என்ன சொன்னானாம் ?"
"இல்ல ரஞ்சா .இந்த Monk who sold Ferrari  புக் எழுதி இருக்கானே அவண்டா "
Ranjan "நமக்கு தெரிஞ்சதெல்லாம் ஒரே Monk .அது Old Monk தான் .ஹிஹி "

இந்த மாதிரி அப்பப்ப  பினாத்தினாலும்  எல்லாரும் போல் ஒரு பயம்.தோல்வி பயம். இதுவரைக்கும் இந்த ஐடியா மணிக்கு திடீரென ஒரு ஐடியா வரும். வரும்போதெல்லாம் அதை Share  பண்றது இந்த  நண்பர்கள்கிட்ட தான்.அவங்களும் காது கொடுத்து கேப்பாங்க .  ஏன்னா அவங்களுக்கு ஒரு சின்ன ஆசைBut ஆனா நம்ம விஜய் மாதிரி பினாத்த  மாட்டாங்க.அவ்வளவுதான்.

Idea  1

'மச்சி நாம ஒரு வெப்சைட் தொடங்குகிறோம் மச்சி' 

Idea  2
'நம்ம ஒரு காபி ஷாப் ஆரம்பிக்கிறோம்.Theme  வந்து டிஃபரண்ட் டைப் பண்றோம்'

Idea  3
' மச்சி இந்த Chetan  Bhagat  மாதிரி புக்  எழுதலாம் என்று நினைக்கிறேன்டா '


ஆனா இந்த மூன்று ஐடியாவும் ஐடியா ஸ்டேஜ்ல செத்துப் போய்டுச்சு .

 இப்போ ஒரு புது ஐடியா வந்திருக்கு. விஜய் மூன்று பேருக்கும் போன்ல கான் கால் போடுறான்.
Dinesh இடம் "மாமா ஒரு முக்கியமான விஷயம். இரு. ரஞ்சனையும்  PC  இரண்டு பேரையும் Con -Call  இல்  எடுக்கிறேன்.நீயும்  line  இல் இரு"
Dinesh  "சரிடா  மச்சி ".
"PC !! Dinesh  line ல  இருக்கான்.Con -Call இல் ரஞ்சனை  எடுக்கிறேன் "
PC  வாழக்கம் போல் " Cool .Buddy "என்றான் .
Con -Call  எல்லாருமே இணைகிறார்கள் .
விஜய் மற்றவர்களிடம் " ஓகே நீங்க ரெடியா ??" என்று வினவ PC  வழக்கம்போல "மச்சி!! நான் நாயக்கர் டா என்று கலாய்க்கிறான்" .
விஜய் PC  இடம் " மச்சி ! இந்த கல்லணை காலத்து comedy யை தயவு செஞ்சு விட்டுடுடா "
PC  மறுபடிடயும்  " Cool .Buddy "என்றான் .
விஜய் மேற்கொண்டு தொடர்ந்தான்" மச்சான் நம்ம எல்லாரும் சீக்கிரமாக பிரபலமாக ரிச்சாக ஒரு சூப்பர் ஐடியா!!" என்று நிறுத்த  எல்லார் மனதிலும் இவன் என்ன புதுசா பீதிய கிளப்புறாங்க என்ற மாதிரி ஒரு ரியாக்சன்.
தினேஷ் விஜயிடம் "மச்சான்!! ஈமு கோழி.  comodity கோல்ட் காயின் இப்படி  ஏதாவது சொல்லிடாதடா!! ற்கனவே எங்க ஊரு மட்டும் இல்ல எல்லா இடத்திலேயும் பலபேர் டவுசர் கழண்டு போச்சு " என்றான்.

 விஜய் தினேஷிடம் "மச்சி !!உனக்கு என்ன பத்தி தெரியும் இல்ல. நமக்கு முக்கியம் பணத்தைவிட பிரபலமாகரதுதான் ".தினேஷ் "அதனால்தான் இன்னும் இருக்கேன் . விஷயத்தை சொல்லு  " என்றான் .
ரஞ்சனும், PC  யும்  கூர்ந்து கவனிக்கிறார்கள். விஜய் மேலும் தொடர்ந்தான்"மச்சான்!! நாம எல்லாம் சேர்ந்து ஒரு Short  Film  எடுக்கிறோம். Famous  ஆகுறோம் ". PC  விஜயிடம் "சாரிடா!! ரெண்டு மாசம் முன்னாடி நடு ராத்திரி நானும்,ரஞ்சனும்  உ ன்ன  கலாய்த்தது தப்பு தான் .அதுக்காக இப்படி ரெண்டு மாசம் கழிச்சு இப்படி  எங்கள  வச்சு காமெடி பண்ணாதடா " என்றான்.
தினேஷ் விஜயிடம் " மச்சான்! அவனுக கலாய்க்கிறது ஓகே நான் ஒண்ணுமே பண்ணல டா என்னை ஏண்டா??" என்று  கேட்டான் .
விஜய் எல்லாரிடமும் "Be  சீரியஸ் Guys " என்றான் . தினேஷ் மற்றவர்களிடம் " மச்சான் இவன் என்னடா துப்பாக்கி விஜய் விட ஓவரா சீன் போடறான்"

விஜய் மேலும் தொடர்ந்தான் " சரி மச்சிஸ் !! நான் இந்த சனிக்கிழமை காலைல பெங்களூர் வரேன். நான் வரதுக்கு முன்னாடியே டைட்டாகிட்டு மட்ட ஆயிடாதீங்க டா !!" என்று  கூற PC விஜயிடம் "சரி!! நீ வவந்த பிறகு சேர்ந்து  மட்ட  ஆகலாம்னு சொ ல்ல வரியா ??" என்று  கலாட்டா செய்தான். "டேய் நீ திருந்தவே மாட்டியா?? ஓகே சரி காலையில நாம  எல்லாருமே  தினேஷ் வீட்ல மீட் பண்றோம் ".
ரஞ்சன் "எதுக்குடா ???"
விஜய் " ஸ்டோரி டிஸ்கஷன்" என்று இன்டெர்வல் பிளாக் சஸ்பென்ஸ் போல சொல்லி போனை  வைத்தான்.

பெங்களூர் 

விஜய் தினேஷ் வீட்டில இருக்க பிசி ரஞ்சன் இருவருமே உள்ளே நுழைகிறார்கள். பிசி தினேஷ் இடம் "என்ன மச்சி!! Wife உம்  குழந்தையும் எங்க??" என்று வினவ  தினேஷ் "அவங்க ரெண்டு பேரையும் அவங்க  சித்தி வீட்ல விட்டுட்டு வந்துட்டேன் டா அவங்களுக்கும் ஒரு டென்ஷன் free  weekend  வேணுமில்ல??" என்று கூறினான்.
ரஞ்சன்  சிரித்துக்கொண்டே "பாத்தியா மச்சி அவனுக்கு  வேணும்ங்கிறத  அப்படியே wife க்கு  வேணும்னு  சொல்லிட்டான் பாரு" என்று கலாட்டா செய்தான்.

தினேஷ்  மற்றவர்களிடம்" நான் போய் நமக்கு தேவையான ITems வாங்கிட்டு  வந்துவிடுறேன்  கூட வரேன் என்றபடி செருப்பை போட கிளம்பினான்.

சிறிது நேரத்திற்கு பிறகு தினேஷ்  திரும்ப வீட்டுக்குள் நுழையும்போது ஒரே சத்தம் கேட்க, பயங்கரமான ஸ்டோரி டிஸ்கஷன் போயிட்டு இருக்கு போல இருக்கே என்று நினைத்தபடியே கதவைத் திறக்கிறான்.
 விஜய் "மச்சான்!! சிக்கன் பிரியாணி செட்டிநாடு சிக்கன் கிரேவி"
PC அவன் பங்கிற்கு "Buddy !! நெத்திலி மீன் fry .Prawn  கிரேவி .ஃபிஷ் பிரியாணி தான் சரியான காம்பினேஷன்"
 தினேஷ் "டேய்!! என்னடா நடக்குது இங்க.நான் நீங்க என்ன என்னவோ செஞ்சிட்டு  இருக்கீங்க னு நினைச்சி  உள்ளே வறேன் " என்று முடிப்பதற்குள் ரஞ்சன் "கரெக்ட் மச்சி !!வெயிலுக்கு Mutton  தன பெஸ்ட் னு பேசிக்கிறாங்க .நாம ஏன்  அதை try  பண்ண கூடாது??"
தினேஷ் "என்ன கொலைகாரனாக மாத்திடாதீங்க  டா . பிரேக் பாஸ்ட் முடிஞ்சு அரைமணி நேரம் கூட ஆகல அதுக்குள்ள லஞ்ச பத்தி டிஸ்கஸ் பண்ண ஆரம்பிச்சிட்டிங்க"

விஜய் உடனே "சாரி மச்சி!! இப்ப Focussed  ஆ  இருப்போம்.ஸ்டோரி டிஸ்கஷன் ஸ்டார்ட் பண்ண போறோம்" என்றான்.
விஜய் கதை சொல்ல ஆரம்பிக்க போகிறேன் என்று மூன்று பேரும் காத்திருக்கிறார்கள்.
 தினேஷ் கேட்க வாய்  எடுக்கும் முன்பு விஜயே  ஆரம்பிக்கிறான் "டேய்!! என்னடா எதுமே பேச மாட்டேங்கிறீங்க ??"
PC " டேய்!! அது  நாங்க கேட்க வேண்டிய கேள்வி"
விஜய் மேற்கொண்டு "நான் தான் சொன்னேனே ஸ்டோரி டிஸ்கஷன் பண்ணலாம்னு "
ரஞ்சன் "டேய்!! story  சொன்னால்தான் டிஸ்கஷன் பண்ண முடியும்" 
விஜய் சிரித்துக்கொண்டே "Actually. டிஸ்கஸ்  பண்ணத்தான் story  யே  பண்ண முடியும்" என்று  கூற அனைவரின் முகத்திலும் ஈ  ஆடவில்லை.
PC "மச்சி !!உன் கால்ல வேணா விழாரின்.சனிக்கிழமை  அதுவுமா கடுப்ப கிளப்பாதடா " என்றான் .
தினேஷ் " ஏண்டா ! அப்போ  இங்க வந்து பண்றது தான் உன் ஐடியா வா .இந்த அருமையான ஐடியா வோட பஸ் ஏறிட்ட . சத்தியமா இன்னைக்கு ஒரு  கொலை விழறது  நிச்சயம்"


விஜய் " மச்சிஸ் !! டென்ஷன் ஆகாதீங்க டா இந்த ராஜேஷ் இருக்கான்ல" என்று ஆரம்பிக்க , ரஞ்சன் " யாருடா!! அந்த EEE  படிச்சானே  அந்த  ராஜேஷா ??" என்றான் .
விஜய் "இல்ல மச்சி. இந்த 'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்' இந்த படம் எல்லாம் எடுத்தான் பாரு " என்று கூற PC  " ஓஹோ !!டைரக்டர் ராஜேஷ்.அவனைத்தான்  ஏதோ  பக்கத்துக்கு வீடு பய்யன் rangeக்கு சொன்னிங்க ??" என்று நக்கலடித்தான்.
விஜய் "Yes .ஆமா மச்சி அவன் எல்லா பேட்டிகளிலும் இந்த கதையெல்லாம் கேட்டு வராதீங்க எனக்கே தெரியாது . அப்படின்னு சொல்லுவான் . ஆனா பாரு எல்லா படமும் ஹிட்"
 எல்லாரும் "ஒஒஒஒஒ " என்று  கோரசாக ஒரு  நய்யாண்டியுடன்  கூறினார்கள். விஜய் மேற்கொண்டு " இந்த கதை ஒரு வித்தியாசமான கதை என்று சொல்றான் பாரு அவனை படம் தான் மச்சி ஊத்திக்குது " 
 தினேஷ் " டேய் கடுப்பை  கிளப்பாத .Short  film  எடுக்கிறேனு  சொல்லிக்கிட்டு tight  ஆகாமலேயே அலப்பறை  பண்ணிக்கிட்டு இருக்கே ".

விஜய்  " மச்சி மச்சி .இல்லேடா . நான் சும்மா உங்கள கலாட்டா  பண்ணேண்டா.Atually கதையே  நாலு friends  short  film  எடுக்கிறது பத்தி தான் " என்பர் கூற PC " முறுகலா  10 மசாலா தோசை" என்று கூற இதற்காகவே காத்திருந்த மாதிரி  மூவரும் ஒன்றாக பாய  விஜய் "தி எண்டு" என்றான்.     



















3 comments:

  1. Excellent Narration Vijay! "Story to discuss" and "Discuss for story".. hilarious...

    ReplyDelete
  2. ஓஹோ..அப்றம் என்ன ஆச்சு?

    ReplyDelete